ஐக்கிய நாடுகள் சபையானது (UN) 2026 ஆம் ஆண்டினைக் கால் நடை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ப்பர்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது.
கார்பன் பிரித்தெடுத்தல், பல்லுயிர் மற்றும் பருவநிலை மீள்தன்மைக்கு முக்கியமான புல்வெளிகள் மற்றும் புல் நிலக் காடுகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.
புல்வெளிகள் ஆனது வேளாண்மை, தோட்டங்கள், ஊடுருவல் இனங்கள், புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுத்தல் மற்றும் தீக்கட்டுப்பாட்டு கொள்கைகளால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
கட்டுப்படுத்தப்பட்ட பயிர் எரிப்பு மற்றும் மேய்ச்சல் போன்ற பூர்வீக நடைமுறைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன என்றாலும் அவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
உலகளாவிய மற்றும் இந்தியக் கொள்கைகள் புல்வெளிகளைப் பருவநிலைத் திட்டங்களிலும் பாரிசு உடன்படிக்கையின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகளிலும் (NDCs) ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
புல்வெளிகளை கார்பன் உறிஞ்சும் இடங்களாக அங்கீகரிப்பது பருவநிலைத் தணிப்பு மற்றும் மேய்ச்சல் வாழ்வாதாரங்கள் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும்.