கால்நடை வளர்ப்பு பற்றிய அடிப்படைப் புள்ளி விவரங்கள் 2022
March 23 , 2023 815 days 375 0
மத்திய அரசானது, கால்நடை வளர்ப்புத் துறையின் ஒரு வருடாந்திர வெளியீடான ‘கால்நடை வளர்ப்பு பற்றிய அடிப்படைப் புள்ளி விவரங்கள் 2022’ என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணமானது, கால்நடைத் துறையின் ஒரு மரபார்ந்த மற்றும் முக்கியமானத் தகவல் ஆதாரமாகவும் உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்தப் பால் உற்பத்தி சுமார் 221.06 மில்லியன் டன்களாக இருந்தது.
நடப்பு ஆண்டான 2021-22 ஆம் ஆண்டில், பால் உற்பத்தியின் வருடாந்திர வளர்ச்சி விகிதமானது 5.29% ஆக பதிவாகியுள்ளது.
பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் ராஜஸ்தான் (15.05%), உத்தரப் பிரதேசம் (14.93%), மத்தியப் பிரதேசம் (8.06%), குஜராத் (7.56%) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (6.97%) ஆகியனவாகும்.
முந்தைய ஆண்டை விட 6.19% அதிகரித்து, 2021-22 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 129.60 பில்லியன் ஆகும்.
முட்டை உற்பத்தியில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம் (20.41%), தமிழ்நாடு (16.08%), தெலுங்கானா (12.86%), மேற்கு வங்காளம் (8.84%) மற்றும் கர்நாடகா (6.38%) ஆகியனவாகும்.
2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தியானது 5.62% என்ற வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன், 9.29 மில்லியன் டன்களாக இருந்தது.
இறைச்சி உற்பத்தியில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் மகாராஷ்டிரா (12.25%), உத்தரப் பிரதேசம் (12.14%), மேற்கு வங்காளம் (11.63%), ஆந்திரப் பிரதேசம் (11.04%), மற்றும் தெலுங்கானா (10.82%) ஆகியனவாகும்.
முந்தைய ஆண்டை விட 10.30% குறைந்து 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கம்பளி உற்பத்தி 33.13 ஆயிரம் டன்களாக இருந்தது.
கம்பளி உற்பத்தியில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் ராஜஸ்தான் (45.91%), ஜம்மு மற்றும் காஷ்மீர் (23.19%), குஜராத் (6.12%), மகாராஷ்டிரா (4.78%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4.33%) ஆகியனவாகும்.
2020-21 ஆம் ஆண்டில், வேளாண் துறையில் நிலையான விலையில் கால்நடைத் துறையின் பங்கு மற்றும் மொத்த நிகர மதிப்புக் கூட்டல் அளவு ஆகியவை முறையே 30.13% மற்றும் 4.9% ஆகும்.