கால்நடைகள் மற்றும் வளர்ப்புக் கோழிகள் பற்றிய இன வாரியான அறிக்கை
May 18 , 2022 1184 days 472 0
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கால்நடைகள் மற்றும் வளர்ப்புக் கோழிகள் பற்றிய இன வாரியான அறிக்கையை வெளியிட்டார்.
இனம் வாரியான தரவு சேகரிப்பானது, 20வது கால்நடைக் கணக்கெடுப்பின் போது (2018-19) மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் முதன்முறையாக இனம் வாரியான தரவுகள் காகித முறையில் இல்லாமல் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப் படுகிறது.
கிர் என்ற கால்நடை இனம் 68.57 இலட்சம் என்ற அளவில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அடுத்த நிலையில் லக்கிமி மற்றும் சாஹிவால் ஆகிய இனங்கள் உள்ளன.
காரியார், கெரிகர், கெங்காத்தா , மோட்டு மற்றும் ஹரியானா ஆகிய கால்நடைகளின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளன.
20வது கால்நடைக் கணக்கெடுப்பின்படி மொத்தக் கால்நடை எண்ணிக்கையில் 36.04% மட்டுமே கால்நடைகள் ஆகும்.
இதில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 6% குறைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில், மொத்தக் கால்நடை எண்ணிக்கையில் 79% ஆக இருந்த நாட்டு மாடுகளின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 73% ஆக குறைந்துள்ளது.