பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கோவா சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கலாச்சார முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி, காளைச் சண்டைக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கக் கோரியுள்ளனர்.
இது அங்கு திரியோ என்று அழைக்கப்படுகிறது.
கோவாவில் நடத்தப்படும் காளைச் சண்டையில் மனிதர்கள் பங்கேற்காமல் இரண்டு பயிற்சி பெற்ற காளைகள் அவற்றின் கொம்புகளைக் கொண்டு மோதிக் கொள்கின்றன.
ஒரு காலத்தில் தேவாலயத் திருவிழாக்கள் மற்றும் அறுவடைக் கொண்டாட்டங்களின் போது இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்தன.
கோவாவில் உள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆனது 1996 ஆம் ஆண்டு விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காளைச் சண்டைகளைத் தடை செய்தாலும், இந்த நடைமுறை இரகசியமாகத் தொடர்கிறது.
இந்தச் சண்டைகளின் போது காளைகள் மற்றும் மனிதர்கள் இறக்கும் சமீபத்திய பதிவுகள் மற்றும் சட்டவிரோதப் பந்தயம் அதிகரிப்பது போன்றவை இதன் சட்டப் பூர்வமாக்கல் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தோற்றுவித்துள்ளது.