2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற காவலர் தினக் கொண்டாட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்றார்.
2025–2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் போது, செப்டம்பர் 06 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் காவலர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
1859 ஆம் ஆண்டு சென்னை மாவட்டக் காவலர் சட்டம் இயற்றப்பட்டதை காவலர் தினம் குறிக்கிறது.
1859 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டமானது நவீன காவல் அமைப்பிற்கு அடித்தளத்தினை அமைத்தது.