காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொடக்க தினம்
August 29 , 2019 2168 days 577 0
புது தில்லியில் நடைபெற்ற காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Bureau of Police Research and Development - BPR&D) 49வது தொடக்க தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போதுஉள்துறை அமைச்சர் BPR&Dயின் புதிய இலச்சினையை வெளியிட்டார்.
இந்தக் கொண்டாட்டத்தின் கருத்துரு, "சிறந்த நடைமுறைகள் மற்றும் தரங்களை மேம்படுத்துதல்" என்பதாகும்.
இதுபற்றி
காவல் துறைகளின் நவீனமயமாக்கலுக்காக BPR&D ஆனது 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று அமைக்கப்பட்டது.
தற்பொழுது இது ஆராய்ச்சி, மேம்பாடு, பயிற்சி மற்றும் சீர்திருத்த நிர்வாகம் என 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது.