TNPSC Thervupettagam

கவல் புலிகள் காப்பகம்

August 1 , 2026 23 days 128 0
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA), தெலங்கானாவில் உள்ள காவல் புலிகள் காப்பகத்தை, புலிகளை மீட்டெடுப்பதற்கான ஒரு முன்னுரிமைத் தளமாக அடையாளம் கண்டுள்ளது.
  • தமக்கு ஏற்ற வறண்ட இலையுதிர் காடுகள் வாழ்விடத்தைக் கொண்டிருந்த போதிலும், தற்போது இங்கு நிரந்தரமாக வசிக்கும் இனப்பெருக்கப் புலிகளின் கூட்டம் இல்லை.
  • அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பில் (AITE), காவலில் நிரந்தரமாக வசிக்கும் புலி எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
  • காவல் புலிகள் காப்பகம், மத்திய இந்தியப் புலிகள் நிலப்பரப்பை, தடோபா-அந்தாரி (மகாராஷ்டிரா) மற்றும் இந்திராவதி (சத்தீஸ்கர்) காப்பகங்களுடன் இணைக்கிறது.
  • இது வடக்கு தெலங்கானாவில் கோதாவரி மற்றும் கடம் நதிப் படுகைகளின் ஓரத்தில் அமைந்து ள்ளது.
  • இந்தப் பரிந்துரையானது, NTCA மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து வெளியிட்ட 'இந்தியாவில் புலிகளைத் தீவிரமாக நிர்வகிப்பதற்கான செயல் திட்டத்தின்' ஒரு பகுதியாகும்.
  • காவலில் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள், தேக்கு மரங்கள் நிறைந்த வனப்பகுதிகள், மூங்கில் தோப்புகள் மற்றும் ஆற்றோர வாழ்விடங்கள் உள்ளன.
  • இது மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள புலிகளின் கூட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்