மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் முதன்மை வெளியீடான காவல்துறை அமைப்புகளின் தரவு (Data on Police Organizations-DoPO) 2018 என்ற தரவினை வெளியிட்டார்.
இந்த வெளியீடானது அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள், மத்திய ஆயுதப் படை அமைப்பு மற்றும் மத்திய காவல்துறை அமைப்புகளிடமிருந்துப் பெறப்படும் காவல்துறை உள்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் பிற வளங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பாகும்.
முக்கியத் தரவு
மகளிர் காவல்துறையின் பலத்தில் 20.95% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய காவல்துறையில் பெண்களின் மொத்த சதவீதம் இப்போது 8.73% ஆகியுள்ளது.
மாநில அளவில் ஒட்டு மொத்தக் காவலர்களின் விகிதம் ஆனது ஒரு லட்சம் மக்களுக்கு 95 போலீஸ்காரர்கள் என்பதாகும்.
காவல் நிலையங்கள் 15579 என்ற அளவிலிருந்து 16422 ஆக உயர்ந்துள்ளன.
இதில் இணைய வழி குற்றங்களைக் கண்டறியும் காவல் நிலையங்களும் அடங்கும். அவற்றின் எண்ணிக்கை 84 என்பதிலிருந்து 120 ஆக உயர்ந்துள்ளது.
மின்னணுக் கண்காணிப்பு அமைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது - மொத்தம் 2,75,468 மறைகாணி (சிசிடிவி) ஒளிப்படக் கருவிகள் நிறுவப் பட்டுள்ளன.