தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில், 5.7 லட்சம் ஏக்கர் இலக்கில் இதுவரையில் 3.09 லட்சம் ஏக்கர் பயிரிடப் பட்டுள்ளதுடன் குறுவை (குறுகிய காலத்தில் நெல் சாகுபடி) வேளாண்மை சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 60,000 ஏக்கர் அதிகமாகும் என்பதோடு இது பிரதான டெல்டா பகுதியைத் தவிர்த்து வேறொரு பகுதியில் பதிவான மிகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
டெல்டா பகுதிக்கு மிகவும் முக்கியமான மேட்டூர் அணையானது, கிட்டத்தட்ட 93 TMC அடி (ஆயிரம் மில்லியன் கன அடி) நீர் வரத்துடன் நிரம்பியுள்ளது.
ஜூன் மாதத்தில், தமிழ்நாடு மாநிலம் பிலிகுண்டுலுவில் 42.25 TMC அடி நீர் வரத்தினைப் பெற்றது என்பதோடு இது வழக்கமான 9.19 TMC வரத்தினை விட மிக அதிகமாகும்.