November 9 , 2025
16 hrs 0 min
6
- காவிரி நதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அதில் படிந்திருந்த வண்டல்களில் கன உலோகங்கள் கண்டறியப்பட்டன.
- இந்த ஆய்வு ஆனது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்டது.
- பல்வேறு மீன் இனங்களில் பாதுகாப்பான வரம்புகளை மீறி, அதிக அளவு காட்மியம் மற்றும் ஈயம் இருப்பது கண்டறியப்பட்டது.
- இந்த ஆய்வானது, 18 வண்டல் படிவு தளங்கள் மற்றும் ஆற்றங்கரையோரத்தில் உள்ள 10 மீன் பிடிப்பு மாதிரித் தளங்களில் மேற்கொள்ளப்பட்டது.
- தொழில்துறை கழிவுகள், வேளாண் கழிவுநீர் மற்றும் நகர்ப்புற கழிவுநீர் ஆகியவை மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களாக அடையாளம் காணப்பட்டன.
- ஆற்றில் இருந்து பெறப்படும் மீன்களை வழக்கமாக நுகர்வது, கன உலோகச் செறிவு காரணமாக சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று இந்த ஆய்வு எச்சரித்தது.
Post Views:
6