இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு இராணுவங்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி நள்ளிரவிலிருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கவும் அனைத்து ஒப்பந்தங்களையும் கடுமையாகக் கடைபிடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன.
2003 ஆம் ஆண்டு போர் நிறுத்த விதி மீறல்கள் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது புரிந்துணர்வு இதுவாகும்.
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது கார்கில் போருக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து, அதாவது 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப் பட்டது.
2003 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் முதன்மை எல்லைப் பகுதி முழுவதும் நடைமுறைக்கு வந்தது.