காஷ்மீர் குங்குமப் பூவிற்கு புவிசார் குறியீடு
May 5 , 2020
1845 days
891
- இதற்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
- இது ஜம்மு காஷ்மீரின் கரேவாஸ் (உயர்நிலப் பகுதிகளில்) பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப் படுகின்றது.
- சராசரி கடல் மட்ட அளவில் இருந்து 1600மீ – 1800 மீ உயரத்தில் பயிரிடப்படும் உலகின் ஒரே குங்குமப்பூ வகை இதுவாகும்.
- இது “நீல மாணிக்கம் மற்றும் குங்குமப் பூவின் நிலம்” என்று சிறப்பாக அறியப் படும் கிஸ்த்துவார் பகுதியில் வளர்க்கப்படுகின்றது.
- இது கிமு 1 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த மக்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
- இது பண்டைய சமஸ்கிருத இலக்கியத்தில் (அமரகோசரா) “பகுகாம்” என்று அறியப் படுகின்றது.

Post Views:
891