TNPSC Thervupettagam

காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் – ஜம்மு காஷ்மீர் மாநிலம் கலைப்பு

October 31 , 2019 2076 days 671 0
  • 1985 ஆம் ஆண்டுப் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான கிரிஷ் சந்திர முர்மு என்பவர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • 1977 ஆம் ஆண்டு திரிபுரா மாநில பணிப் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராதா கிருஷ்ணா மாத்தூர் என்பவர் லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்றார்.
  • துணைநிலை ஆளுநர்களின் பதவிப் பிரமாணமானது ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான கீதா மிட்டல் என்பவரால் செய்து வைக்கப் பட்டது.

மாநில அந்தஸ்து விலக்கம்

  • அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த இந்தியாவின் மாநிலம் என்ற அந்தஸ்து விலக்கிக் கொள்ளப் பட்டது.
  • ஒரு மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் போன்று ஒரு சட்டமன்றம் கொண்ட ஒன்றியப் பிரதேசமாகவும் லடாக் ஒன்றியப் பிரதேசமானது சண்டிகர் போன்று சட்டமன்றம் இல்லாத ஒரு ஒன்றியப் பிரதேசமாகவும் இருக்கும்.
  • ஆனால் ஒரு ஒன்றியப் பிரதேசமானது ஒரு முழு மாநிலமாக அல்லது இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
  • நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆகக் குறைய இருக்கின்றன. அதே நேரத்தில் ஒன்றியப் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக  உயர இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்