காஸ்மோஸ்/Kosmos 482 என்பது கோள்களின் ஆய்வுக்கு, குறிப்பாக வெள்ளிக் கோளின் ஆய்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வெனெரா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது 1972 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் ஏவுகலச் செயலிழப்புகள் காரணமாக, அன்றிலிருந்து அது புவியின் சுற்றுப் பாதையை விட்டு வெளியேறாமல், ஈர்ப்பு விசையின் காரணமாக புவியைச் சுற்றி வருகிறது.
1 மீட்டர் அகலமுள்ள இந்த விண்கலம் ஆனது சுமார் 500 கிலோகிராம் எடை கொண்டது மற்றும் டைட்டானியத்தால் கட்டமைக்கப்பட்டது.
மத்திய அந்தமான் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் கட்டுப்பாடற்ற மறு நுழைவு நிகழ்ந்தது.