கிசான் ஆளில்லா விமானங்களுக்கு வான்வழிப் போக்குவரத்திற்கான தலைமை இயக்குநரகத்தின் ஒப்புதல்
December 30 , 2022 954 days 478 0
ஆளில்லா விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், வான்வழிப் போக்குவரத்திற்கான தலைமை இயக்குநரகத்தின் வகை சார் சான்றிதழ் மற்றும் தொலைதூரத்திலிருந்து இயக்குவதற்கான பயிற்சி அமைப்பு ஆகியவற்றிற்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்புதலானது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிசான் வகை ஆளில்லா விமானங்களுக்காகப் பெறப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஒப்புதலைப் பெற்ற இந்தியாவின் முதல் ஆளில்லா விமான உற்பத்தி செய்யும் புத்தொழில் நிறுவனமானது இதுவேயாகும்.
வான்வழிப் போக்குவரத்திற்கான தலைமை இயக்குநரகத்தின் வகை சார் சான்றிதழ் ஆளில்லா விமானங்களின் தரச் சோதனையின் அடிப்படையில் அதனை கடுமையான சோதனைச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டப் பிறகு வழங்கப் படுகிறது.
இந்திய அரசானது, ஆளில்லா விமானங்களுக்கான விதிமுறைகளின் கீழ் 2021 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் வகைசார் சான்றிதழ் வழங்கீட்டு முறையினை இந்தியாவில் அறிமுகப் படுத்தியது.
இந்தியாவிலேயே தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ‘கிசான்’ ஆளில்லா விமானங்கள் ஆனது பயிர் இழப்பைக் குறைத்தல், பயிர் வளக் கண்காணிப்பு, மகசூல் அளவீடு மற்றும் சமீபத்திய உற்பத்தித் திறன் கொண்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுப் பயிர் இழப்பை ஈடு செய்தல் போன்ற வேளாண் நோக்கங்களுக்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.