2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதியன்று ஒரே நேரத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்துக் காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து இந்தியா ஒரு வரலாற்றைப் படைத்தது.
இந்த நிகழ்வானது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா முன்னிலையில் நடந்தேறியது.
இது பீகார் மாநிலத்தின் போஜ்பூரில் நடைபெற்ற 'வீர் குன்வர் சிங் விஜயோத்சவ்' என்ற ஒரு நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்டது.