கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டம் - இந்தியா
December 5 , 2018 2529 days 819 0
2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்திற்கு (Kimberley Process Certification Scheme - KPCS) இந்தியா தலைமை வகிக்க இருக்கிறது.
பெல்ஜியத்தின் பிரசெல்ஸில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான KPCS-ன் முழுமையான அமர்வின்போது தலைமைப் பொறுப்பானது ஐரோப்பிய யூனியனால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
கிம்பர்லி செயல்பாடு
சட்டப்பூர்வமான அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் போரினிற்கு நிதி திரட்டுவதற்காக புரட்சிக் குழுக்களால் பயன்படுத்தப்படும் கடினமான வைரத் தயாரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படாத சட்ட விரோத வைரங்களின் கை மாறுதலை தடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட, சர்வதேச வைர நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றிற்கிடையேயான கூட்டிணைவே கிம்பர்லி செயல்முறை ஆகும்.
சான்றளிப்பு இல்லாத வைரங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை முற்றிலுமாக KPCS தடை செய்கிறது.
KPCS முறையானது ஐ.நா பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
KPCS-ஐ உருவாக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் இத்திட்டமானது மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வணிகத் துறையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.