கிரண் (ஊக்குவிப்பின் மூலம் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அறிவின் ஈடுபாடு - (Knowledge Involvement in Research Advancement through Nurturing) என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பெண்களுக்கான ஒரு பிரத்தியேகத் திட்டமாகும்.
இது பாலின நீரோட்டத்தின் மூலம் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாலின சமத்துவத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண் விஞ்ஞானிகள் தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியமான சிக்கல்களைக் கையாளும் வகையில் கிரணின் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு கூறுகள் உள்ளன.