கிரண் மஜும்தார்-ஷா ஸ்காட்லாந்தில் உள்ள ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பர்க் (RSE - Royal Society of Edinburgh) நிறுவனத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
RSE என்பது உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்துவதில் அவர்கள் ஏற்படுத்திய ஒரு தாக்கத்தை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல், கலை, கல்வி, வணிகம் மற்றும் பொது வாழ்க்கை ஆகிய துறைகளில் இருந்து RSE நிறுவனத்தில் சேருவதற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.