TNPSC Thervupettagam

கிராண்ட் நைல் அணை 2025

July 9 , 2025 7 days 55 0
  • பல ஆண்டு கால பணிகளுக்குப் பிறகு புளூ நைல் நதியில் கிராண்ட் எத்தியோப்பியன் ரினையசன்ஸ் அணையின் (GERD) கட்டுமானப் பணிகளை எத்தியோப்பியா நிறைவு செய்துள்ளது.
  • 6,000 மெகாவாட்டுகளுக்கு மேலான அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ள இந்த அணையானது, எத்தியோப்பியாவின் மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கும்.
  • சரியான முறையிலான நீர்ப் பயன்பாட்டிற்காக, உகாண்டா உள்ளிட்ட நதியின் மேல் மட்ட நாடுகளிடமிருந்து எத்தியோப்பியா ஆதரவைப் பெற்றது.
  • நைல் படுகையில் உள்ள பத்து நாடுகள் 2024 ஆம் ஆண்டில் இந்த நீர்ப் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன ஆனால் இந்த ஒப்பந்தம் எகிப்து அல்லது சூடான் ஆகியவற்றினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  • இந்த அணையானது சூடான் நாட்டின் எல்லைக்கு அருகில், எத்தியோப்பிய நாட்டின் தலைநகரிலிருந்து (அடிஸ் அபாபா) சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்