ஜார்க்கண்ட் அமைச்சரவையானது, 1996 ஆம் ஆண்டு பஞ்சாயத்துகள் (திட்டமிடப் பட்டப் பகுதிகளுக்கு விரிவுப்படுத்துதல்) சட்டத்தின் (PESA) கீழ், மாநிலத்தில் கிராம சபைகளுக்கு அதிகாரமளிக்கின்ற விதிகளை அங்கீகரித்தது.
இந்த விதிகள் கிராம சபைகளுக்கு சிறு வன விளைபொருட்கள், உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நீர் வள மேலாண்மை ஆகியவற்றின் மீது அதிகாரத்தை வழங்குகின்றன.
இந்த விதிகள் அதிகப் பழங்குடி மக்கள் தொகையைக் கொண்ட ஐந்தாவது அட்டவணை பகுதிகளுக்குப் பொருந்தும்.
கிராம சபைகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு வரையறுக்கப்படும்.
2001 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தேர்தல்களை இந்த விதிகள் பாதிக்காது.
13 மாவட்டங்கள் முழுமையாக ஐந்தாவது அட்டவணை பகுதிகளின் கீழ் உள்ளன, அதே நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகள் பகுதியளவு பட்டியலிடப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
துறைகள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டன என்பதோடு மேலும் முறையான அறிவிப்புக்குப் பிறகு இவை நடைமுறைக்கு வரும்.