கிராம நியாயாலயங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்
February 6 , 2020 2015 days 739 0
இந்திய உச்ச நீதிமன்றமானது நான்கு வார காலத்திற்குள் 'கிராம நியாயாலயங்களை' நிறுவ வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பானது உச்ச நீதிமன்ற நீதிபதியான என் வி ரமணா தலைமையிலான அமர்வினால் வழங்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் கிராம நியாயாலயங்களை நிறுவுவதற்கான அறிவிப்புகளை இன்னும் வெளியிடவில்லை என்று இந்த அமர்வு குறிப்பிட்டுள்ளது.
கிராம நியாயாலயங்கள் என்பவை கிராம நீதிமன்றங்களாகும். இவை இந்தியாவில் உள்ள கிராமப் புறங்களில் நீதித்துறையை விரைவான மற்றும் எளிதான முறையில் அணுகப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கிராம நியாயாலயங்கள் சட்டம், 2008 ஆனது இந்தியப் பாராளுமன்றத்தால் 2008 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது