கிராமப்புற இணைப்பு – புவியிடங்காட்டி அமைப்பின் தரவு
February 26 , 2022 1272 days 621 0
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிராமப்புற இணைப்பு பற்றிய புவியிடங்காட்டி அமைப்புத் தரவுகளைப் பொது தளத்தில் வெளியிட்டார்.
இந்தத் தரவானது பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்திற்காக உருவாக்கப் பட்ட புவியிடங்காட்டி அமைப்பினை (GIS - Geographic information system) பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 8 லட்சம் கிராமப்புற இணைப்பு வசதிகள் பற்றிய புவியிடங்காட்டி தகவல்களை உள்ளடக்கியது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டமானது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட ஒரு திட்டமாகும்.
இந்தத் திட்டமானது, நாடு முழுவதும் உள்ள இணைக்கப்படாத அனைத்து வாழிடங்களுக்கும் வேண்டி அனைத்து வானிலையிலும் பயணிக்க ஏதுவான சாலை இணைப்பினை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டதாகும்.