கிராமப்புற சிறப்பு அதிகாரிகளுக்கான பதவிக்கால நீட்டிப்பு
October 20 , 2025 16 hrs 0 min 7 0
தமிழ்நாடு அரசானது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தினைத் திருத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மசோதா கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதி வரை நீட்டிக்க முயல்கிறது.
சிறப்பு அதிகாரிகளின் தற்போதைய பதவிக் காலம் ஆனது ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதி வரையில் ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் நீட்டிக்கப் பட்டது.
இந்த நீட்டிப்பு 28 மாவட்டங்களில் உள்ள 9,624 கிராமப் பஞ்சாயத்துகள், 314 பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் 28 மாவட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பொருந்தும்.
தொகுதி மேம்பாட்டு அதிகாரிகள் (கிராமப் பஞ்சாயத்துகள்) கிராமப் பஞ்சாயத்துகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக செயல்படுகின்றனர்.
உதவி இயக்குநர்கள் (பஞ்சாயத்துகள் அல்லது தணிக்கை) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
கூடுதல் இயக்குநர்கள், கூடுதல் ஆட்சியர்கள், இணை இயக்குநர்கள் அல்லது திட்ட இயக்குநர்கள் மாவட்டப் பஞ்சாயத்துகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப் படுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல், திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் நகராட்சி மன்றங்கள் மாநகராட்சிக் கழகங்களாக மாற்றப்பட்டன.
கிராமப் பஞ்சாயத்துகளை இந்த மாநகராட்சிகளுடன் இணைப்பது பாதிக்கப்பட்டப் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் மாவட்டங்களில் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
பஞ்சாயத்துகளின் குறைப்பு ஒட்டு மொத்த தொகுதி மறுசீரமைப்புச் செயல்பாட்டில் பிரதிபலிக்கும்.
தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை முடிந்த பின்னரே கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.