TNPSC Thervupettagam

கிராமப்புற ஸ்டார்ட் அப் (புதிதாக தொழில் தொடங்குவோர்)

May 15 , 2019 2192 days 770 0
  • தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (National Bank for Agriculture and Rural Development - NABARD) பின்வருவனவற்றிற்காக ரூ.700 கோடி மதிப்பிலான துணிகர முதலீட்டு நிதியை அறிவித்துள்ளது.
    • வேளாண் துறையில் பங்கு மூலதனங்கள்
    • கிராமப் புறத்தில் உள்ள ஸ்டார்ட் அப்-களின் மீது கவனம் செலுத்துதல்.
  • இந்த நிதியானது நபார்டின் ஒரு துணை நிறுவனமான நாப் துணிகர மூலதர நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
  • விவசாயம், உணவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னுரிமை பெறவிருக்கின்றன.

NABARD

  • நபார்டு என்பது கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக முதலீடுகள் மற்றும் உற்பத்திக்கான கடன்களை வழங்கும் நிறுவனங்களுக்கான ஒரு தலைமை நிதியியல் அமைப்பாகும்.
  • இது 1982 ஆம் ஆண்டில் B. சிவராமன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
  • இது குடிசைத் தொழில், சிறு தொழில் மற்றும் கிராமப்புறத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியினை மேற்பார்வையிடுகின்றது.
  • நபார்டு பின்வருவனவற்றை மேற்பார்வையிடுகின்றது.
    • மாநில கூட்டுறவு வங்கிகள்
    • மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிகள்
    • மண்டல கிராமப்புற வங்கிகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்