கிரிக்கெட் மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்
July 24 , 2017 2850 days 1230 0
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வந்தது. அதன் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து.
அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.25 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த இந்திய அணிக்கு ரூ.2.12 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.