வான்வழிப் போக்குவரத்து அமைச்சகமானது “கிரிஷி உடான் 2.0” என்ற திட்டத்தினை தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ், மலைப்பகுதி, பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள விமானநிலையங்களில் சரக்குப் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பானது நிறுவப்படும்.
விவசாயிகள் வேளாண் உற்பத்திப் பொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கு இது போன்ற உள்கட்டமைப்புகள் உதவும்.
குறிப்பு
வேளாண் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வது குறித்த தகவல்களைப் பங்குதாரர்களிடம் பரப்புவதற்கு ஏதுவாக கிரிஷி உடான் 2.0 திட்டத்தின் கீழ் இ-குஷால் என்ற தளமானது உருவாக்கப்படும்.