TNPSC Thervupettagam

கிரீன் ஃபின்ஸ் மையம்

September 21 , 2022 1031 days 492 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தினைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ரீஃப் வோர்ல்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நிலையான கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி கிரீன் ஃபின்ஸ் என்ற மையத்தினைத் தொடங்கியுள்ளன.
  • இதுவே இம்மாதிரியிலான முதல் வகையான உலகளாவியக் கடல்சார் சுற்றுலாத் துறை தளமாகும்.
  • உலகெங்கிலும் உள்ள கடலில் மூழ்குதல் மற்றும் சுவாசக் குழாய் மூலம் உள்நீச்சல் மேற்கொள்ளுதல் போன்ற சாகச வசதிகளை வழங்கும் நிறுவனங்கள், கடல்சார் சுற்றுலாவின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் அவற்றின் அன்றாட நடைமுறைகளில் எளிமையான, செலவு குறைந்த மாற்றங்களை மேற்கொள்ள இது உதவும்.
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்புடன் இணைந்து ரீஃப் வோர்ல்டு அறக்கட்டளை மூலம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்