கிரீன் விசா (பசுமை நுழைவு இசைவு) - ஐக்கிய அரபு அமீரகம்
September 11 , 2021 1406 days 653 0
ஐக்கிய அரபு அமீரகமானது புதிய வகை விசாக்களை அறிவித்துள்ளது.
கிரீன் விசாவின் கீழ், வெளிநாட்டினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்திட வேண்டிப் பணியளிப்பவரின் நிதியுதவியைப் பெறத் தேவையில்லை.
இந்தத் திட்டம், வெளிநாட்டினர் தங்களின் பழைய வேலையை இழந்தால், புதிய வேலையைத் தேடுவதற்கு என்று அவர்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான சலுகைக் காலத்தை அனுமதிக்கும்.
நாட்டில் வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்துப் பெற்றிட வேண்டி வெளிநாட்டினர்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் நோக்கத்தில் இது கொண்டு வரப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிற்குப் பணக்காரர்களை மற்றும் திறமையான தொழிலாளர்களை வரவேற்பதை நோக்கமாகக் கொண்டு 10 வருட "தங்க நுழைவு இசைவு" என்பதை அறிமுகப் படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரகம் தவிர, சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் சமீபத்தில் தங்கள் நாடுகளைப் பணக்கார முதலீட்டாளர்களுக்குத் திறந்து விட்டன.