கிரீன்லாந்தின் உருகும் பெருங்கடல் பற்றிய ஆய்வுப் பணி - நாசா
February 2 , 2022
1210 days
598
- பொதுவாக OMG ஆய்வுப்பணி என குறிப்பிடப்படும் கிரீன்லாந்தின் உருகும் பெருங் கடல் பற்றிய ஆய்வுப் பணியானது நாசாவால் தொடங்கப்பட்டதாகும்.
- இது ஐந்தாண்டு அளவிலான ஒரு ஆய்வுப்பணியாகும்.
- இது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று முடிவடைந்தது.
- இந்த ஆய்வுப்பணியானது முதன்மையாக கிரீன்லாந்து பகுதியில் ஏற்பட்ட பனி இழப்பை அளவிடுகிறது.
- கிரீன்லாந்தின் அனைத்துப் பனிகளும் உருகினால், உலகக் கடல் மட்டம் 7.4 மீட்டர் என்ற அளவிற்கு உயரும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
- கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக உருகி வருகின்றன.

Post Views:
598