பயிர் உற்பத்தி மேம்பாட்டிற்காக "அதிவேக இனப்பெருக்கத்தை" ஊக்குவிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையினால் கிருதக்யா 3.0 என்ற முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பானது மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் இதரப் பிரிவினருக்கு பயிர் மேம்பாட்டிற்கான புதுமையான அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை விளக்கிக் காட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
KRITAGYA என்பதில் KRI என்பது வேளாண்மை என பொருள்படும் கிரிஷி என்பதனையும்; TA என்பது தொழில்நுட்பம் என பொருள்படும் தக்னிக் என்பதனையும்; மற்றும் GYA என்பது அறிவு என பொருள்படும் க்யான் என்பதனையும் குறிக்கிறது.