TNPSC Thervupettagam

கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பு

February 22 , 2022 1252 days 499 0
  • இது நான்கு நாட்கள் அளவிலான ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.
  • இதன் முதல் நாளானது கர்நாடகா முழுவதும் காணப்படும் 251 பறவை இனங்கள் பற்றி குடிமக்கள் மத்தியில் பதிவு செய்யும் நிகழ்வுடன் தொடங்கியது.
  • இது இணைய வழியிலான குடிமக்கள் சார்ந்த அறிவியல் அல்லது சமூகம் சார்ந்த ஒரு அறிவியல்  திட்டமாகும்.
  • இது 1998 ஆம் அண்டில் கார்னல் பறவையியல் ஆய்வகம் மற்றும் தேசிய அதுபோன் சொசைட்டியினால் (National Audubon Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • உலகப் பறவை இனங்களின் வருடாந்திர இடம்பெயர்தலில் ஒன்று நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைப் பற்றி சரியாக புரிந்து கொள்வதற்கு அறிவியலாளர்களுக்கு இது உதவுகிறது என்பதே இந்த நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
  • இது பற்றிய தரவுகள் உலகின் மிகப்பெரிய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான குடிமக்கள் சார்ந்த ஒரு அறிவியல் (சமூகம் சார்ந்த) திட்டமான ‘இபெர்டு’ (eBird) என்பதுடன் இணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்