TNPSC Thervupettagam

கிரேட் பேரியர் பவளப் பாறை இழப்பு

August 14 , 2025 2 days 26 0
  • 39 ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து கிரேட் பேரியர் (Great Barrier) பவளப் பாறையானது அதன் அதிகபட்ச வருடாந்திர உயிருள்ள பவள இழப்பைப் பதிவு செய்து உள்ளது.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான வெப்ப அழுத்தத்தால் 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரிய வெளிர்தல் நிகழ்வைத் தொடர்ந்து இந்த பவளப் பாறை இழப்பு ஏற்பட்டது.
  • இந்த இழப்பு இருந்தபோதிலும், 2017 ஆம் ஆண்டு முதல், வளர்ச்சி காரணமாக மொத்த பவளப்பாறைப் பரவல் நீண்ட கால சராசரி அளவிற்கு அருகிலேயே உள்ளது.
  • இந்தப் பவளப் பாறை அமைப்பு ஆனது, ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து 344000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
  • மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தப் பவளப் பாறையில், 2024 ஆம் ஆண்டில் தெற்கில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பவளப்பாறை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • வடக்குப் பகுதியானது அதன் பவளப்பாறைகளில் கால் பகுதியை இழந்தது, மத்தியப் பகுதி 14 சதவீதம் இழந்தது.
  • 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான உலகளாவிய வெப்ப அலையானது, நான்காவது மற்றும் மிக மோசமான உலகளாவிய பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வுக்கு வழிவகுத்தது.
  • இந்தப் பவளப் பாறை உட்பட உலகின் பவளப்பாறைப் பகுதிகளில் சுமார் 84 சதவீதத்தை வெப்ப அழுத்தம் பாதித்தது.
  • நீடித்த அதிக வெப்பநிலையானது, பவளப்பாறைகள் பாசிகளை அகற்றி, அதனை வெண்மையாக மாற்றும் போது பவளப்பாறை வெளிர்தல் ஏற்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்