TNPSC Thervupettagam

கிரேட்டர் ஃபிளமிங்கோக்கள் (பெரும் பூநாரைகள்) - வீராணம் ஏரி

October 28 , 2026 3 days 57 0
  • தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் 18 பெரும் பூநாரைகள் காணப்பட்டன; உள்நாட்டு நன்னீர் ஏரியான இங்கு இவை காணப்படுவது ஒரு அசாதாரண நிகழ்வாகும்.
  • பெரும் பூநாரைகள் (ஃபோனிகோப்டெரஸ் ரோசியஸ்) IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த (LC) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இவை பொதுவாக கடலோர ஈரநிலங்கள், சேற்றுப் பகுதிகள், காயல்கள் மற்றும் ஆழமற்ற நீர்நிலைகளுடன் தொடர்புடையவையாகும்.
  • குறைந்த மழைப்பொழிவு, குறைந்த காவிரி நீர்வரத்து மற்றும் கடலோரச் சேற்றுப் பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஆகியவை இவற்றின் வழக்கமான வலசைப் போதல் முறையை மாற்றியிருக்கலாம்.
  • இந்த இனம் பொதுவாக குளிர்காலத்தில் கட்ச் வளைகுடாவிலிருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கி வலசை போகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்