சமீபத்தில், மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள புவி இயக்கப் பகுதியான "கிரேட்டர் மாலத்தீவு ஆழ்கடல் முகட்டின்" மேலோட்டு இயக்கப் பரிணாம வளர்ச்சியை (tectonic evolution) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலோட்டு இயக்கப் பரிணாமமானது, முதலில் இருந்த கோண்ட்வானா நிலப்பரப்பின் பிரிந்த பகுதியை மறுகட்டமைக்க உதவும்.
இந்த அம்சமானது, கண்டங்களின் இன்றையக் கட்டமைப்பு, கண்டப் பகுதிகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடல் படுகைகள் உருவாக வழி வகுத்தது.