கிறிஸ் எவர்ட் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் முதலாவது உலகக் கோப்பை
October 31 , 2018 2380 days 703 0
உலகின் முதல்நிலை வீரரான சிமோனா ஹலெப் கிறிஸ் எவர்ட் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் முதலாவது உலகக் கோப்பையின் முதல் வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அவர் உலகின் முதல்நிலை வீரர் என்று தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளார்.
கிறிஸ் எவர்ட் முதலாவது உலகக் கோப்பை என்ற பெயரானது 1975 ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதியன்று உலக டென்னிஸ் சங்கத்தின் உலகின் முதல்நிலை வீரர் என்ற தகுதியை முதல்முறையாக அடைந்த கிறிஸ் எவர்ட் என்ற வீரரின் பெயரிலிருந்து எடுத்து வைக்கப் பட்டிருக்கின்றது. அவர் தொடர்ந்து 260 வாரங்களாக முதல் இடத்திலேயே இருந்தார்.