மூலோபயமிக்க வகையில் அமைந்துள்ள கில்கிட் – பல்திஸ்தான் பகுதிக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு சட்டத்தினைப் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் இறுதி செய்துள்ளனர்.
கில்கிட் – பல்திஸ்தான், இந்தியாவின் சர்ச்சை மிகுந்த பகுதிகளுள் ஒன்றாகும்.
இது லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் வடக்கு முனையில் அமைந்துள்ள உயரமானப் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.
இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றின் எல்லையாக அமைந்திருப்பதால் மூலோபயமிக்கப் பகுதியாக உள்ளது.
இது 1947 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு முன்னாள் சுதேச மாகாணமான ஜம்மு & காஷ்மீரின் ஒரு பகுதி என இந்தியாஇப்பகுதி மீது உரிமை கோருகிறது.
இருப்பினும் பழங்குடியினப் போராளிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவம் ஆகியவற்றின் படையெடுப்பைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு நவம்பர் 04 முதல் இப்பகுதியானது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது கில்கிட் – பல்திஸ்தான் ஒரு தன்னாட்சி பகுதியாகும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டப் பிறகு இது பாகிஸ்தானின் 5வது மாகாணமாக மாறும்.
தற்போது பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய 4 மாகாணங்கள் உள்ளன.