TNPSC Thervupettagam

கிளர்ச்சிக் குழுவின் மீது தடை

February 12 , 2019 2308 days 732 0
  • மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதிலும் இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்காக வேண்டி அவர்களைத் தயார்படுத்தி ஆளெடுப்பதிலும் ஈடுபடும் தெஹ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act - UAPA) கீழ் தடை செய்திருக்கின்றது.
  • இது 1990-ஆம் ஆண்டுகளில் காஷ்மீரின் விடுதலை என்ற நோக்கத்திற்குப் போராடுவதற்காக அமைக்கப்பட்டது என கூறிக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்
  • இச்சட்டம் இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களைத் வேலைகளை திறம்பட தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
  • இதன் முதன்மையான நோக்கம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கைகளை கையாளும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும்.
  • மேலும் இந்தச் சட்டத்தின்படி எந்தவொருப் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவளிப்பதும்  இந்தியா தனக்கென்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளை வெளிநாட்டினர் உரிமை கொண்டாடும் போது அதற்கு ஆதரவளிப்பதும்  குற்றமாகும்.
  • 1967-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டம், 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டு ஆகிய இரு காலங்களில் திருத்தப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்