அதிகளவில் கார்பனை வெளியிடும் நாடுகள், 2030 ஆம் ஆண்டிற்கான வலுவான உமிழ்வுக் குறைப்பு இலக்குகளுடன், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கள் கால நிலைச் செயல் திட்டங்களை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டன.
முந்தைய வரைவில் நிலக்கரியை "வெளியேற்றுவது" என்று அளிக்கப்பட்ட ஒரு உறுதி மொழியானது, அதற்குப் பதிலாக நிலக்கரியை " குறைப்பதற்கான" உறுதிமொழிக்கு தற்போது மாற்றப் பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட ஏழை நாடுகளைத் திருப்திப் படுத்துவதற்குப் போதுமான நிதி ஊக்குவிப்புகளை உள்ளடக்கியுள்ளதோடு கார்பன் வர்த்தகத்திற்கு வழி வகுக்கும் ஒரு நீண்ட காலப் பிரச்சனையைத் தீர்ப்பதாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இந்த இலக்கை அடைய 3 அளவுகோல்களை நிர்ணயித்து இருந்தாலும் அவற்றில் எதுவும் அடையப்படவில்லை.
அந்த மூன்று உறுதிமொழிகள்
2030 ஆம் ஆண்டிற்குள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைப் பாதியாக குறைக்க உறுதிமொழி
பணக்கார நாடுகளில் இருந்து ஏழைகளுக்கு $100 பில்லியன் நிதி உதவி
அந்தப் பணத்தில் பாதியானது வளரும் நாடுகளுக்குப் பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளுக்கு ஏற்றவாறு உதவுவதை உறுதி செய்தல்.