TNPSC Thervupettagam

கிஷோரி சக்தி காரியகிரம்

March 10 , 2020 2294 days 1005 0
  • ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த பதினான்கு பதின்ம வயதுப் பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தன்று ‘கிஷோரி சக்தி காரியகிரம்’ என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
  • இது நகரின் சேரிப் பகுதிகளில் வாழும் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆர்வலர்கள் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
  • இந்தப் பிரச்சாரமானது இளம் பருவத்தினருக்கும் சமூகத்திற்கும் மாதவிடாய், திருமணத்திற்கான சரியான வயது, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளில் இடைநின்ற பெண்களை மீண்டும் அவற்றைத் தொடர ஊக்குவித்தல், பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் இளம் பருவக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்