TNPSC Thervupettagam

கீழடியில் அகழ்வாராய்ச்சி

March 18 , 2026 3 days 91 0
  • கீழடி மற்றும் பிற ஏழு இடங்களில் 11-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தொல்லியல் துறைக்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ASI) அனுமதி வழங்கியுள்ளது.
  • ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் விதிகள், 1959-இன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்.
  • பட்டினமருதூர் (தூத்துக்குடி), கரிவலம்வந்தநல்லூர் (தென்காசி), மணிக்கொல்லை (கடலூர்), அடிச்சனூர் (விழுப்புரம்), வெள்ளலூர் (கோயம்புத்தூர்), தெலுங்கனூர்–மாங்காடு (சேலம்) மற்றும் நாகப்பட்டினம் ஆகியன அனுமதிக்கப்பட்ட பிற இடங்கள் ஆகும்.
  • தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம் 2025–26-இன் ஒரு பகுதியாக, அகழ்வாராய்ச்சிக்கான முன்மொழிவு மாநில அரசால் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.
  • தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகள் வழக்கமாகப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை நடத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்