TNPSC Thervupettagam

கீழடியில் புதிய கண்டுபிடிப்புகள்

July 27 , 2026 3 days 86 0
  • தமிழ்நாட்டில் உள்ள கீழடி தொல்லியல் தளத்தில் நடைபெற்ற 11-வது கட்ட அகழாய்வில் புதிய செங்கல் கட்டுமானங்கள், வடிகால் அமைப்புகள் மற்றும் பல தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • சிவகங்கை மாவட்டத்தில் மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை (TNSDA) அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
  • 11-வது கட்ட அகழாய்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று தொடங்கி, அகழாய்வுத் தள அருங்காட்சியகப் பகுதிக்குத் தெற்கே மேற்கொள்ளப்பட்டது.
  • அனைத்து ஒன்பது குழிகளிலும் தொடர்ச்சியான செங்கல் கட்டுமானங்கள் காணப் பட்டன, மேலும் அவை தோண்டப்பட்ட பகுதிக்கு அப்பால் மேற்கு மற்றும் வடக்கு நோக்கி நீண்டுள்ளன.
  • ஒரு குழியில் சுடுமண் குழாய் மற்றும் மூடிய வடிகால் அமைப்பு காணப்பட்டதுடன், இது திட்டமிட்ட குடியிருப்பின் அம்சங்களைக் காட்டுகிறது.
  • சுடுமண் மணிகள், தக்களிகள், இரும்புக் கத்திகள், உளி, வாள்கள், ஆணிகள், விலை மதிப்பற்ற கற்கள், தந்தத்தாலான பகடை மற்றும் சிறிய தங்க ஆபரணங்கள் உட்பட 1,300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
  • மீன் சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு பானை உட்பட முழுமையான பானைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்பதோடு மேலும் அதிலுள்ள கரிம எச்சங்கள் கார்பன் காலக் கணிப்பிற்கு அனுப்பப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்