TNPSC Thervupettagam

குஜராத் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்

July 8 , 2025 7 days 58 0
  • இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கொண்ட மூன்றாவது மாநிலமாக குஜராத் மாறியுள்ளது.
  • தேசியப் பங்குச் சந்தை (NSE) தரவுகளின்படி, குஜராத் ஒரு கோடி முதலீட்டாளர்களைக் கடந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடங்கிய ஒரு பட்டியலில் இணைகிறது.
  • இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவின் மொத்த முதலீட்டாளர் தளத்தில் சுமார் 36% பங்கினைக் கொண்டுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டு  மே மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 11.5 கோடி பதிவு செய்யப் பட்ட முதலீட்டாளர்கள் உள்ளனர்.
  • வட இந்தியாவானது 4.2 கோடி முதலீட்டாளர்களுடன் முன்னணியில் உள்ளது; மேற்கு இந்தியா 3.5 கோடி முதலீட்டாளர்களைக் கொண்டுள்ளது.
  • தென்னிந்தியா 2.4 கோடி முதலீட்டாளர்களைக் கொண்டுள்ளது, கிழக்கு இந்தியா 1.4 கோடி முதலீட்டாளர்களைக் கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டை விட தென்னிந்தியா சுமார் 22 சதவீதமும், மேற்கு இந்தியாவானது 17 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்