குஜராத் மாநிலத்தின் முன்னாள் மாநில முதல்வர் விஜய் ரூபானி, அகமதாபாத்தில் நடைபெற்ற மிகத் துயரமான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விபத்தில் உயிர் இழந்தார்.
அவர் 1987 ஆம் ஆண்டு ராஜ்கோட் மாநகராட்சிக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதோடு பின்னர் 1996 முதல் 1997 ஆம் ஆண்டு வரையில் ராஜ்கோட்டின் மேயராக பணியாற்றினார்.
அவர் 2006 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்திற்கு மாநிலங்கள் அவையில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரை குஜராத் சட்டமன்ற உறுப்பினராகப் பணி ஆற்றினார்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று, ரூபானி குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப் பட்டு 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பணியாற்றினார்.