புலிகள் இருப்பதற்கான தொடர்ச்சியான சான்றுகளைத் தொடர்ந்து, 33 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதிகாரப்பூர்வமாக புலிகளைக் கொண்ட ஒரு மாநிலமாக குஜராத் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புலிகள் வளங்காப்பிற்கான முதன்மை அமைப்பான தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) இந்த முடிவை முறையாக அறிவித்தது.
குஜராத்-மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள தஹோட் மாவட்டத்தில் அமைந்துள்ள இரத்தன்மஹால் சோம்பல் கரடி சரணாலயத்தில் சுமார் நான்கு வயதுடைய புலி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கணக்கெடுப்புகளில் ஒன்றான 2026 ஆம் ஆண்டு அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டில் (AITE) குஜராத் தற்போது சேர்க்கப் படும்.