குஜராத்தின் கட்ச்சில் உள்ள கோட்டாடா பட்லியில் 4,000 ஆண்டுகள் பழமையான சத்திரம் / கேரவன்செராய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இடம் கிமு 2300-1900 ஆம் காலக் கட்டத்தின் போதான சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சேர்ந்தது.
அகழ்வாராய்ச்சிகளில் வலுவூட்டப்பட்ட சுவர்கள், கோட்டைகள், முற்றங்கள், விலங்கு பாதுகாப்பு அடைப்புகள் மற்றும் பல அறைகள் வெளிக்கொணரப்பட்டன.
இந்தச் சத்திரம் ஆனது வணிகர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கி ஒரு தங்குமிடமாக செயல்பட்டது.
மட்பாண்டங்கள், உணவு எச்சங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் பொருட்கள் ஆகியவை அடங்கிய கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வர்த்தக நடவடிக்கைகளைக் காட்டுகின்றன.