இந்திய அரசானது, ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களையும் PM கதி சக்தி தளத்தில் வரைபடமாக்க உள்ளது.
PM கதி சக்தி தளமானது, ஒரு புவியியல் தகவல் அமைப்பு (GIS) அடிப்படையிலான டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டமிடல் கருவியாகும்.
இது பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி-தகவல் நிறுவனத்தினால் (BISAG-N) உருவாக்கப்பட்டது.
இந்தத் தளமானது, நீர் நிலைகளின் புவியிடக் குறியிடல், தனித்துவமான திட்ட நிலையிலான அடையாள எண்கள் மற்றும் JJM திட்டத்தின் கீழ் குடும்ப அளவிலான கண்காணிப்பு ஆகியவற்றை அனுமதிக்கும்.
PM கதி சக்தி தளம் ஆனது தற்போது சாலைகள், இரயில்வே, துறைமுகங்கள் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு உட்பட 200க்கும் மேற்பட்ட GIS தரவு அடுக்குகளைக் கொண்டு உள்ளது.