TNPSC Thervupettagam

குடிமைப் பணிகள் வாரியம்

June 22 , 2020 1839 days 686 0
  • கடந்த வாரத்தில் பஞ்சாப் மாநில அரசானது அம்மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் மற்றும் பணியமர்த்துதல் குறித்து முடிவு செய்வதற்காக 3 உறுப்பினர்கள் கொண்ட குடிமைப் பணிகள் வாரியத்தை அமைத்துள்ளது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது 2013 ஆம் ஆண்டில் குடிமைப் பணிகள் வாரியத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
  • இது அரசியல் இடையீடுகளிலிருந்து குடிமைப் பணி அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப் படுகின்றது. இது அரசியல் தலைவர்களினால் மேற்கொள்ளப் படும் தொடர் இடம் மாற்றல் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது.
  • இது மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலாளரால் தலைமை தாங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்