குடிமைப் பதிவுகள் முறையை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் இன்றியமையாத புள்ளியியல் குறித்த 2018 ஆம் ஆண்டு அறிக்கை
November 19 , 2020
1702 days
731
- சமீபத்தில் இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் பாலின விகிதங்கள் குறித்த தகவலைத் தருகின்றது.
- பிறப்பின் போதான பாலின விகிதம் என்பது பிறப்பின் போது 1000 ஆண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதைக் குறிக்கின்றது.
- சிறந்த பாலின விகிதம் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் (1084) ஆகும்.
- இதில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அடுத்து நாகாலாந்து (965), மிசோரம் (964), கேரளா (963) மற்றும் கர்நாடகா (957) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- இதில் மிகவும் மோசமான செயல்பாடு கொண்ட மாநிலமாக மணிப்பூர் (757) விளங்குகின்றது.
- பிறப்புப் பதிவுகளின் நிலையானது 2009 ஆம் ஆண்டில் 81.3% என்ற நிலையிலிருந்து 2018 ஆம் ஆண்டில் 89.3% ஆக அதிகரித்துள்ளது.

Post Views:
731