TNPSC Thervupettagam

குடியரசு அமைச்சர்

June 14 , 2022 1069 days 450 0
  • ஆஸ்திரேலிய நாடானது, “குடியரசுக்கான துணை அமைச்சரை” நியமித்தது.
  • இது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமைத்துவத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எனவே, பிரித்தானிய மன்னர் இனி அரசின் தலைவராகக் கருதப்படமாட்டார்.
  • ஆஸ்திரேலியாவின் முடியாட்சி என்பது ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும் ஒரு வகை அரசாட்சியாகும்.
  • இது ஆஸ்திரேலிய இறையாண்மை மற்றும் அரசத் தலைவரால் உருவகப் படுத்தப் படுகிறது.
  • இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் தற்போதைய அரசின் தலைவர் மற்றும் இராணி ஆவார்.
  • ஆஸ்திரேலிய அரசியலமைப்பின்படி, ஆஸ்திரேலியாவில் இவரின் சார்பாக தலைமை ஆளுநர் பொறுப்பேற்று அரசினை நடத்துவார்.
  • தலைமை ஆளுநர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோர் முறையே மாநில மற்றும் மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அரசியால் நியமிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்